முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட யமஹா R15 V3.0 பைக் கேமரா கண்களில் சிக்கியுள்ளதால், வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது.

R15 V3.0 பைக்

இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட யமஹா ஆர் 15 வெர்ஷன் 2.0 மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சர்வதேச அளவில் சில நாடுகளில் V3.0 மாடல் இரட்டை பிரிவு முகப்பு விளக்கு கொண்ட மிகவும் ஸ்டைலிசான் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விற்பனையில் உள்ள வெர்சன் 2.0 மாடலை விட கூடுலான பவருடன் 19 ஹெச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவை பெற்றுள்ளது.

சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள மாடலில் ஏபிஎஸ் சென்சார் இணைக்கப்படாமல் உள்ளது. மேலும் புதிய மாடல் வருகை குறித்து அதிகார்வப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற முழுதும் அலங்கரிக்கப்பட்ட 150சிசி பைக்குகளில் மிக சிறப்பான இடத்தை யமஹா ஆர்15 பெற்று விளங்குகின்றது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

spy image -bikeadvice