சுப்ரோ மேக்ஸி மினி டிரக் சிறப்பான இடவசதி மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய டிரக்காக விளங்கும். சுப்ரோ மேக்ஸி மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 22.4 கிமீ ஆகும்.
45 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 909சிசி டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 98என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
T2 , T4 , T6 என மொத்தம் மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கும். இவற்றில் T2 வேரியண்டில் மெனுவல் ஸ்டீயரிங் , T4 பவர் ஸ்டீயரிங் மற்றும் T6 வேரியண்டில் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏசி உள்ளது. வெள்ளை , கிரே மற்றும் நீலம் என மூன்று விதமான வண்ணங்களில் மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் கிடைக்கும்.
மேலும் படிக்க ; மஹிந்திரா சுப்ரோ மினி வேன் முழுவிபரம்
மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக் ரூ.4.25 லட்சம் முதல் ரூ.4.90 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் தானே)
Mahindra Supro Maxitruck launched