Skip to content

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

tata ace pro lineup

750 கிலோ பேலோடு பெற்ற ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குகின்ற பெட்ரோல் டாடா ஏஸ் புரோ தவிர சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

இந்தியாவின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்ற நான்கு சக்கர மினி டிரக் மாடலாக விளங்கும் ஏஸ் புரோ மாடலில் AIS096 ஆதரவுக்கு ஏற்ற வலுவான பாடி கொண்டிருக்கின்ற 1985x1425X275 கார்கோ அளவை பெற்று ஹாப் டெக் அல்லது பிளாட்பெட் போன்ற கார்கோ ஆப்ஷனில் வெளிப்படுத்துகின்றது.

Tata Ace Pro

ஏஸ் புரோ பெட்ரோல் மூலம் இயங்கும் மாடல் மணிக்கு 55கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 694cc எஞ்சின் அதிகபட்சமாக 30hp மற்றும் 55Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. சிஎன்ஜி மாடல் ரூ.4.99 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில் 26hp மற்றும் 51Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 5 லிட்டர் கூடுதல் பெட்ரோல் டேங்க் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.

Tata Ace Pro EV

ரூ.6.50 லட்சத்தில் துவங்கும் எலக்ட்ரிக் ஏஸ் புரோ மினி டிரக்கில் 14.4Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 155 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ள நிலையில் மணிக்கு 50 கிமீ வேகத்தை எட்டுகின்றது.

5-100% சார்ஜிங் செய்ய 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு 8 வருட வாரண்டியை வழங்குகின்றது.

சிறிய அளவில் பொருட்களை எடுத்துச் செல்லும் நகராட்சி பயன்பாடுகள் மற்றும் ரீஃபர் பாடி ஃபிட்மென்ட் போன்றவற்றுக்கும் இ-காமர்ஸ் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்றதாக