டாடா மோட்டார்சின் LPT 812 இலகுரக டிரக்கில் 5 டன் எடை பிரிவில் 4 டயர்களுடன் 4SP CR 125 PS எஞ்சின் கொடுக்கப்பட்டு மிக சிறப்பான வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகள், மார்கெட் லோடு, FMCG, பால்ப் பொருட்கள், கொள்கலன்கள் மற்றும் ரீஃபர்கள், பார்சல் கூரியர் & மின் வணிகம், தொழில்துறை பொருட்கள், உணவு தானியங்கள், எல்பிஜி சிலிண்டர்கள், பானங்கள் என பலவற்று பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்பிடி 812ல் உள்ள எஞ்சின் 360 Nm டார்க் 1 400 – 1 800 r/min, பவர் 92.0 kW (125 PS) @ 2 800 r/min வெளிப்படுத்துகின்ற நிலையில் G400 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
மிக சிறப்பான வகையில் சுமையை சுமந்து செல்வதற்கு ஏற்ற வடிவமைப்பு மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் மற்றும் கனரக ரேடியல் டயர்கள் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. இந்த டிரக்கில், ஆன்டி-ரோல் பார், முழு S-Cam ஏர் பிரேக்குகள் மற்றும் டில்ட் & டெலஸ்கோபிக் பவர் ஸ்டீயரிங் கொண்ட பாரபோலிக் முன் சஸ்பென்ஷன் உள்ளது.
3-ஆண்டு அல்லது 3 லட்சம் கிமீ உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படும் டாடாவின் LPT 812 (long platform truck) டிரக்கிற்கு நீண்ட கால நம்பகத்தன்மை, மன அமைதி மற்றும் உரிமையாளர்களுக்கு வலுவான மதிப்பை உறுதி செய்கிறது.
இந்தியாவில் ILMCV (Intermediate, Light and Medium Commercial Vehicles) பிரிவில் முதன்முறையாக LPT 812 டிரக்கின் மூலம் 4 டயர்களை கொண்டுள்ள நிலையில் 5 டன் எடை பிரிவில் கிடைக்கின்ற நிலையில், ஏசி கேபின் ஆப்ஷனலாகவும், கூடுதலாக டாடா ஃபிளீட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.