டிவிஎஸ் அப்பாச்சி RR 310S பைக் வருகை விபரம்

தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய 300சிசி பைக் மாடலுக்கு டிவிஎஸ் அப்பாச்சி RR 310S என பெயரிடப்பட்டுள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அகுலா 310 என காட்சிப்படுத்தப்பட்ட மாடலாகும்.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310S பைக்

  • 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அகுலா 310 என அறிமுகம் செய்யப்பட்டது.
  • பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் உருவான ஜி 310 ஆர் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.
  • மார்ச் 2018 க்கு முன்னதாக இந்த பைக் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

ads

பிஎம்டபிள்யூ G310 R ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைகில் உள்ள அதே 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கில் இடம்பெற உள்ளது.

சமீபத்தில் இணையத்தில் வெளிவந்துள்ள படங்களில் ஏபிஎஸ் எல்இடி ஹெட்லேப்ப், எல்இடி டெயில் விளக்கு போன்றவற்றை பெற்றிருப்பதுடன் ஜி 310 ஆர் பைக்கின் பாகங்களை பெற்றிருக்கலாம். முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள ஆர்ஆர் 310எஸ் பைக்கில் முன்புறத்தில் அமைந்துள்ள யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் தங்க நிறத்தில் அமைந்துள்ளது. அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் வரலாம்.

 

அடுத்த வருடம் டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியிடப்பட உள்ள இந்த மாடல் மார்ச் 2018ல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments