உலகின் மதிப்புமிக்க டாப் 10 மோட்டார் பிராண்டுகள் – 2017

உலகளவில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற பிராண்டுகளில் அதிக மதிப்புமிக்க டாப் 100 பிராண்டுகளில் 10 மோட்டார் பிராண்டுகளும் இடம் பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் மதிப்புமிக்க பிராண்டு பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

மதிப்புமிக்க மோட்டார் பிராண்டுகள் – 2017

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் அதிக மதிப்புமிக்க பிராண்டாக அமெரிக்கா டாலர் $ 28,660 மில்லியன் மதிப்பை பெற்று விளங்குகின்றது. ஆனால் பிராண்டின் மதிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 3 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ளது.

ads

பட்டியலில் மிக முக்கியமான மாற்றமாக மின்சார் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா கடந்த ஆண்டை விட 32 சதவிகித வளர்ச்சி பெற்ற 2016ல் 10வது இடத்தில் இருந்த இந்த பிராண்டு தற்போது 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

போர்ஷே மற்றும் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்களும் பட்டியலில் இணைந்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ பிராண்டு மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 8 சதவிகித அளவிற்கு வீழ்ச்சி பெற்றிருந்தாலும் $ 24,559 மில்லியன் மதிப்பை பெற்று விளங்குகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ஃபோர்டு நிறுவனமும் 5வது இடத்தில் ஹோண்டா நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. மற்ற நிறுவனங்களின் வரிசை மற்றும் பிராண்டு மதிப்பு உள்பட வளர்ச்சி  மற்றும் வீழ்ச்சி விபரங்களை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்.

Comments