யமஹா ஃபேஸர் 25 பைக் சோதனை ஓட்டம்

இந்தியா யமஹா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான யமஹா FZ25 நேக்டு ஸ்போர்ட்டிவ் பைக்கினை அடிப்படையாக கொண்ட யமஹா ஃபேஸர் 25 அல்லது யமஹா ஃபேஸர் 250 பைக் மாடல் வருகின்ற பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரலாம், என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா ஃபேஸர் 25 பைக்

ரூ. 1.19 லட்சத்தில் விற்பனையில் உள்ள யமஹா எஃப்இசட்25 பைக்கினை அடிப்படையாக கொண்ட முழுதும்அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள பைக்கின் சோதனை ஓட்ட பங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. வெளியாகியுள்ள சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக இந்த பைக் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதை உறுதி செய்ய முடிகின்றது.

ads

250சிசி பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட FZ25 நேக்டு ரக பைக்கில்  புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த மாடலிலும் விற்பனையில் உள்ள FZ25 பைக்கின் பெரும்பாலான பாகங்களை பெற்றிருக்கும் என்பதனால் இதில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றிருக்கலாம்..  148 கிலோ எடை கொண்ட எஃப்இசட் 25 மாடலை விட 4 முதல் 5 கிலோ வரை கூடுதலான எடை கொண்டதாக இருக்கும்.

யமஹா ஃபேஸர் 25 பைக் வருகை குறித்து எவ்விதமான தகவலையும் யமஹா வெளியிடாத நிலையில் இந்த பைக் விலை ரூ.1.35 லட்சத்தில் அமைவதுடன், எஃப்இசட் போல அல்லாமல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.

பட உதவி –> fb/notheastbiking

 

Comments