ரூ.20.73 லட்சத்தில் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ரூ.20.73 விலையில் சூப்பர் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்கும் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா YZF-R1 சூப்பர் பைக்

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக (CBU) இறக்குமதி செய்து இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஸ் டிராக் பெர்ஃபாமென்ஸ் ரக ஆர்1 மோட்டார் சைக்கிள் மோட்டோ ஜிபி பந்தய களத்திற்கு ஏற்ற மாடலாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ads

கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்க உள்ள ஆர்1 சூப்பர் பைக்கில் 998 cc எஞ்சின் பொருத்தப்பட்டு 200 hp ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக யமஹா ஆர் 1 சூப்பர் பைக் ரூ.20.73 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) கிடைக்கும்.

Comments