Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போ 2018 : இந்தியாவின் முதல் ஸ்போர்ட்டிவ் மின்சார பைக் எம்ஃபிளக்ஸ் மாடல் 01

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எம்ஃபிளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்,இந்தியாவின் முதல் சக்திவாய்ந்த ஃபுல் ஃபேரிங் மின்சார ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள் மாடலை எம்ஃபிளக்ஸ் மாடல் 01 என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எம்ஃபிளக்ஸ் மாடல் 01

வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி தொடங்க உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 யில் காட்சிக்கு வரவுள்ள எம்ஃபிளக்ஸ் மாடல் ஒன் பைக் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

எம்ஃபிளக்ஸ் ஒன் ஸ்போர்ட்டிவ் பைக்கில் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சாம்சங் நிறுவனத்தின் சக்திவாய்ந்த 9.7 kWh லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட உள்ளது.இந்த பேட்டரியை கொண்டு இயக்கப்படுகின்ற 60 kW AC இன்டெக்‌ஷன் மோட்டார் அதிகபட்சமாக 50KW (65hp) பவர் மற்றும் 84Nm டார்க்கினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஃபிளக்ஸ் ஒன் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ எட்டும் திறன் கொண்டதாகும், மேலும் 0-100 கிமீ வேகத்தை 3.0 விநாடிகளில் எட்டிவிடும் என இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முழுதும் அலங்கரிக்கப்பட்ட இந்த ஸ்போர்ட்டிவ் பைக்கில் முன்புறத்தில் பிரெம்போ பிரேக்குகளுடன் கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டு நவீன தலைமுறையினர் விரும்புகின்ற 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் கிஸ்ட்டரில் ஜிபிஎஸ், நேவிகேஷன் உட்பட பைக் டூ பைக் ஆதரவு , வாகனத்தின் பிரச்சனைகளை அறிய உதவும் அமைப்பு ஆகியவற்றுடன் வரவுள்ளது.

2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்தியா தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள எம்ஃபிளக்ஸ் ஒன் பைக் விலை ரூ.5.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.

Exit mobile version