Automobile Tamilan

எம்ஃபிளக்ஸ் ஒன் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான எம்ஃபிளக்ஸ் மோட்டார் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற எம்ஃபிளக்ஸ் ஒன் எலெக்ட்ரிக் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

எம்ஃபிளக்ஸ் ஒன் பைக்

இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் தீவரமான முயற்சிகளை வாகன தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான எம்ஃபிளக்ஸ் மற்ற நிறுவனங்களை போல குறைந்தபட்ச செயல்திறன் பெற்ற மோட்டார்சைக்கிளை தயாரிக்காமல் பிரிமியம் மாடல்களை களமிறக்க முயற்சித்து வருகின்றது.

2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள எம்ஃபிளக்ஸ் ஒன் மாடல் அதிகபட்சமாக 150-200 கிமீ தொலைவை எட்டும் வல்லமை கொண்ட சாம்சங் 9.7 kWh லித்தியம் ஐயன் உயர் செல் பேட்டரியுடன்,  லிக்யூடு கொண்டு குளிர்விக்கும் முறையிலான 60 kW AC இன்டெக்‌ஷன் மோட்டாரை கொண்டு அதிகபட்சமாக 71 பிஹெச்பி பவர் மற்றும் 84 என்எம் டார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.0 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும், எம்பிளக்ஸ் ஒன் பைக் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும்.

80 சதவீத பேட்டரி சார்ஜ ஆவதற்கு வெறும் 95 நிமிடங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த பைக்கின் முன்பதிவு வருகின்ற ஜூலை 2018 முதல் முன்பதிவு தொடங்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் மத்தியில் டெலிவரி தொடங்கப்படலாம். சக்திவாய்ந்த எம்ஃபிளக்ஸ் ஒன் ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ.5.50 லட்சத்தில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version