ஆட்டோ எக்ஸ்போ 2018 : மாருதி ஃப்யூச்சர் S கான்செப்ட் எஸ்யூவி டீசர் வெளியானது

வருகின்ற பிப்ரவரி 9 – 14 முதல் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 மோட்டார் வாகன கண்காட்சியில் அர்பன் எஸ்யூவி மாடலாக ஃப்யூச்சர் S என்ற பெயரில் கான்செப்ட் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது.

மாருதி ஃப்யூச்சர் S கான்செப்ட்

சர்வதேச அளவில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வரும் யுட்டிலிட்டி ரகத்தில் மிகவும் நேர்த்தியான டிசைன் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் இக்னிஸ் ஆகிய மாடல்களை தொடர்ந்து வெளிவரவுள்ள ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அசத்தலான அம்சத்தை பெற்றத்தாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கான்செப்ட் டீசர் குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் சி.வி. ராமன் அவர்கள் குறிப்பிடுகையில், இந்த கான்செப்ட் கார் யுட்டிலிட்டி சந்தையில் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய டிசைன் தாத்பரியத்தை கொண்ட காம்பேக்ட் கார் மாடலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அறிக்கையில், இந்த மாடல் அடுத்த தலைமுறை டிசைன் தாத்பரியங்களை கொண்டதாக,கம்பீரமான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த எஸ்யூவி மாடல் சுசூகியின் இலகு எடை நோக்கத்தை மையமாக Heartect பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான அமைப்பினை பெற்றதாகவும் வர வாய்ப்புள்ளது.

பிரெஸ்ஸா எஸ்யூவி காருக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருவதனை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய 2019 ஆம் ஆண்டின் மத்தியில் எதிரம்பார்க்கப்படலாம் என கூறப்படுகின்றது.

மேலமிக விபரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்

மேலும் படிங்க ; டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகள்

Exit mobile version