Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போ 2018 : டாடா மோட்டார்சின் ஸ்மார்ட் வாகனங்கள் அறிமுகமாகின்றது

வருகின்ற பிப்ரவரி 9 -14 முதல் டெல்லி கிரேட்டர் நொய்டா அரங்கில் நடைபெற உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் முன்னணி  மோட்டார் வாகன கண்காட்சிகளில் ஒன்றான ஆட்டோ எக்ஸ்போ 2018-ல் 26 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தயுள்ளது.

ஸ்மார்ட் மொபிலிட்டி

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்மார்ட் மொபிலிட்டி, ஸ்மார்ட் சிட்டிஸ் என்ற கான்செப்ட்டை பின்பற்றி பயணிகள் வாகனம், வர்த்தக வாகனங்கள் உட்பட மொத்தம் 26 வாகனங்கள் மற்றும் புதிய இம்பேக்ட் டிசைன் மொழி 2.0 ஆகியவற்றை அறிமுகப்படுத்த காத்திருக்கின்றது.

டாடாவின் ஸ்மார்ட் மொபிலிட்டி  நோக்கத்தில், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து முழுமையான தீர்வினை வழங்கும் நோக்கிலான வகையில் டாடாவின் பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல், வர்த்தகரீதியான பயன்பாட்டு வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்தவருட ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் இந்திய சந்தை மாடல்களை தவிர, பல்வேறு சர்வதேச நாடுகளில் விற்பனை செய்ய்யும் நோக்கத்திலான கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிஇஓ கன்டெர் பட்செக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 70 ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை சர்வதேச தரத்தில் வழங்கி வருகின்றது. எங்களது புதிய மாடல்கள் மிக சிறப்பான திறனுடன் சர்வதேச தரத்திலான அம்சங்களுடன் இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மாடல்களாக விளங்குவதுடன், அரசின் எதிர்கால திட்டங்களை மையமாக கொண்ட வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version