Automobile Tamilan

மாருதி பலேனோ கார் முழுவிபரம்

மாருதி சுசூகி பலேனோ கார் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. மாருதி பலேனோ கார் ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலைநிறுத்த உள்ளனர்.
மாருதி சுசூகி பலேனோ கார்
மாருதி சுசூகி பலேனோ கார்

லிக்யூடு ஃப்ளோ தீமை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சுசூகி பலேனோ கார் புதிய தளத்தில் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் எடை குறைவாகவும் உறுதியான பாகங்களை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

5 இருக்கைகள் கொண்ட பலேனோ காரின் நீளம் 3995மிமீ , அகலம் 1745மிமீ மற்றும் உயரம் 1470மிமீ ஆகும். இதன் பூட் ஸ்பேஸ் 355 லிட்டர் ஆகும். பி பிரிவில் பலேனோ காரில் மிக சிறப்பான வசதிகளை பெற்றுள்ளது.

முகப்பில் வி வடிவத்தினை கொண்ட பள்ளத்தில் சுசூகி லோகோ பதிக்கப்பட்டுள்ளது.  பலேனோ காரில் பகல் நேர எல்இடி விளக்குகளை பெற்றிருக்கும். மிக நேரத்தியான பக்கவாட்டு தோற்றம் மற்றும் ஆலாய் வீலை பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

மாருதி சுசூகி பலேனோ கார்

உட்புறத்தில் நேர்த்தியான பிரிமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் குரோம் இன்ஷர்ட்களை பெற்றுள்ளது. 7 இஞ்ச் அகலம் கொண்ட ஸ்மார்ட் பிளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , ஆப்பிள் கார்பிளே , க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றிருக்கும்.

பலேனோ காரின் சர்வதேச மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் SHVS என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

இந்திய சந்தையில் மாருதி சுசூகி பலேனோ கார் அடுத்த வருடத்தின் மத்தியில்விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

Maruti Suzuki Baleno unveiled at Frankfurt Auto Show 2015

Exit mobile version