Automobile Tamilan

ஹூண்டாய் ஐயோனிக் ஹைபிரிட் விபரம் – ஜெனிவா மோட்டார் ஷோ

வருகின்ற ஜெனிவா மோட்டார் ஷோ கண்காட்சியில் ஹூண்டாய் ஐயோனிக் ஹைபிரிட் கார் காட்சிக்கு வரவுள்ள நிலையில் மூன்று விதமான ஆப்ஷன்களை கொண்டுள்ள எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் விபரங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

hyundai-ioniq-rear

உலகில் முதன்முறையாக மூன்றுவிதமான எலக்ட்ரிக் பவர் ஆப்ஷன்களை கொண்டுள்ள முதல் காராக ஐயோனிக் வந்துள்ளது. இதில் ஹைபிரிட் , பிளக்இன் மற்றும் எலக்ட்ரிக் என மூன்று ஆப்ஷன்களை பெற்றுள்ளது.

ஐயோனிக் ஹைபிரிட்

ஹைபிரிட் வேரியண்டினை வித்தியாசப்படுத்தி காட்டும் வகையில் காப்பர் வண்ண அசென்டினை பெற்றுள்ளது. ஐயோனிக் ஹைபிரிட் மாடலில் புத்தம் புதிய 1.6 லிட்டர் GDI  பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 105 PS மற்றும் 147 Nm டார்க் வெளிப்படுத்தும்.

ஹைபிரிட் மாடலில் 43.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.46 KWh லித்தியம் ஐன் பாலிமர் பேட்டரியை பெற்றுள்ளது.. இந்த இரு ஆற்றலின் ஒட்டுமொத்த ஆற்றல் 141 PS மற்றும் 265 Nm டார்க் ஆகும். இதில் 6 வேக இரு கிளிட்ச் கியர்பாக்ஸ் பெருத்தப்பட்டிருக்கும்.

ஐயோனிக் பிளக் இன்

பிளக் இன் வேரியண்டிலும் ஹைபிரிட் மாடலில் உள்ள புதிய 1.6 லிட்டர் GDI  பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 105 PS மற்றும் 147 Nm டார்க் வெளிப்படுத்தும்.

ஐயோனிக் பிளக் இன் மாடலில் 61 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 8.9 KWh லித்தியம் ஐன் பாலிமர் பேட்டரியை பெற்றுள்ளது. இந்த இரு ஆற்றலின் ஒட்டுமொத்த ஆற்றல் 166 PS ஆகும். இது 50 கிமீ வரை எலக்ட்ரிக் மூலமே இயங்கும். இதில் 6 வேக இரு கிளிட்ச் கியர்பாக்ஸ் பெருத்தப்பட்டிருக்கும்.

ஐயோனிக் எலக்ட்ரிக்

எலக்ட்ரிக் காரில் 120 PS ஆற்றல் மற்றும் 295 Nm டார்க் வெளிப்படுத்தும் 28 KWh லித்தியம் ஐன் பாலிமர் பேட்டரியை பெற்றுள்ளது. இதன் உச்ச வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் முழுசார்ஜ் வாயிலாக சுமார் 250 கிமீ வரை பயணிக்க இயலும்.

7 இஞ்ச் TFT இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ஆப்பிள் கார்பிளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ , வயர்லெஸ் சார்ஜிங் ஸ்மார்ட் போன் என பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.வருகின்ற மார்ச் 1ந் தேதி தொடங்க உள்ள ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வருகின்றது.

 

[envira-gallery id=”5324″]

 

 

Exit mobile version