இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி விற்பனைக்கு வந்தது

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியன் ஸ்கவுட் சிஸ்ட்டி மோட்டார்சைக்கிள் ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரிமியம் மோட்டார்சைக்கிளில் தொடக்கநிலை க்ரூஸர் மாடலாக ஸ்கவுட் சிக்ஸ்டி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


போலாரீஸ் குழுமத்தின் தலைமையின் கீழ் செயல்படும் அமெரிக்காவின் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தன்னுடைய அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.

கடந்த EICMA 2015யில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளின் சிறியரக மாடலாக அதாவது அதே டிசைன் தாத்பரியங்களுடன் 1134சிசி என்ஜினுக்கு மாற்றாக 78bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 999சிசி வி-ட்வீன் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 88.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வந்துள்ள ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிளின் இருக்கை உயரம் 643மிமீ ஆக இருப்பதனால் குறைந்த உயரம் உள்ளவர்களும் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும். ஸ்கவுட் மாடலின் அலுமினிய அடிச்சட்டம் , சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் போன்றவற்றினை பெற்றுள்ளது. ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் வண்ணங்கள் வெள்ளை , சிவப்பு மற்றும் கருப்பு ஆகும்.
இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் விலை ரூ.11.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி )