டிரையம்ப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்தது..!

ரூ. 9.09 லட்சத்தில் டிரையம்ப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரையம்ப் டி120 பைக்கை அடிப்படையாக கொண்டதே போனிவில் பாபர் பைக்காகும்.

டிரையம்ப் போனிவில் பாபர்

இந்த பைக்கில் அதிகபட்ச டார்க்கினை வெளிப்படுத்தும் 1,200சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் என்ஜினை பெற்று அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க்கினை வழங்குகின்றது.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.

150க்கு மேற்பட்ட கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வழங்குகின்ற டிரையம்ப் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளது.  தாழ்வான ஒற்றை ஓட்டுனர் இருக்கை அமைப்பு, பிரத்யேக ஹேண்டில்பார், மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் பல வசதிகளை வழங்குகின்றது.

 

கஸ்டமைஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வசதிகளை ஃபேக்டரி கஸ்டம் என்ற பெயரில் வழங்கும் நோக்கில் போனிவில் பாபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.9.09 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version