Automobile Tamilan

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மைலேஜ் அதிகரிப்பு

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மைலேஜ் லிட்டருக்கு  95கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
69049 tvs sport bike
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்

புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் கூடுதல் மைலேஜூடன் எலக்ட்ரிக் ஸ்டார்ட் , ஸ்போர்ட்டிவ் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய கிராப் ரெயில் போன்றவற்றை பெற்றுள்ளது.

7.5பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இதன் டார்க் 7.5என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 87.7கிமீ தற்பொழுது வந்துள்ள புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் மைலேஜ் லிட்டருக்கு 95கிமீ ஆகும்.

என்ஜின் மைலேஜ் அதிகரிக்கும் வகையில் குறைந்தபட்ச உராய்வு இழப்பு , குறைவான என்ஜின் அழுத்தம் போன்றவற்றை தரும் வகையில் குரோம் பிளேட்டு பிஸ்டன் ரிங் மற்றும் ரோலர் கேம் ஃபாலோயர் பயன்படுத்தியுள்ளனர்.

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் புதிய வசதிகளாக எந்த கிரில் இருந்தாலும் ஸ்டார்ட் ஆக வகையில் செயல்படும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ,  ஸ்போர்ட்டிவ் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் , குரோம் மஃப்லர் கார்ட் மற்றும் புதிய கிராப் ரெயில் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 5 வித அட்ஜெஸ்ட் கொண்ட சஸ்பென்ஷன் பயன்படுத்தியுள்ளனர். மேலும் முன்பக்கம் 130மிமீ மற்றும் பின்பக்கம் 110மிமீ டிரம் பிரேக்குகளை பெற்றுள்ளது.

வெள்ளை , கருப்பு , சிவப்பு , நீளம் மற்றும் கிரே என 5 விதமான வண்ணங்களுடன் புதிய பாடி ஸ்டிக்கரிங்குடன் டிவிஎஸ் ஸ்போர்ட் விற்பனைக்கு வந்துள்ளது.

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விலை ரூ.36,800 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

2015 TVS Sport Launched with improved mileage

Exit mobile version