Automobile Tamilan

இன்று களம் காணுகிற, ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பற்றி அறிவோம்..!

சூப்பர் பைக் பிரியர்களின் மிக விருப்பமான மாடல் பைக்குகளில் ஒன்றான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக் இன்று இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள்

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்குகளில் S , R மற்றும் RS மொத்தம் 3 வகையான உட்பிரிவுகளில் விற்பனையில் கிடைக்கின்றது. இந்தியாவில் ஆரம்ப கட்டமாக ஸ்டீரிட் ட்ரிபிள் எஸ் விற்பனைக்கு வரலாம், இதனை தொடர்ந்து மற்ற இரு வகைகளும் இந்தாண்டின் இறுதிக்குள் களமிறங்கலாம்.

 

S , R மற்றும் RS என மூன்றிலும் ஒரே 765சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட்டிருந்தாலும் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவை வித்தியாசப்படுகின்றது. முந்தைய எஞ்சின் உதிரிபாகங்களிலிருந்து 80 க்கு மேற்பட்ட புதிய உதிரிபாகங்களை பெற்றதாக வந்துள்ளது.

மூன்றின் ஆற்றல் மற்றும் டார்க் விபர அட்டவனை

வேரியன்ட் பவர்  டார்க்
ஸ்ட்ரீட் ட்ரிபிள் S 113 ஹெச்பி at 11,250 RPM 73 என்எம் at 9,100rpm
ஸ்ட்ரீட் ட்ரிபிள் R 118 ஹெச்பி at 11,250 RPM 77 என்எம் at 9,100rpm
ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS 123 ஹெச்பி at 11,250 RPM 77 என்எம் at 9,100rpm

ட்ரிபிள் எஸ் வசதிகளின் முக்கிய அம்சங்கள்

முன்பதிவு நடந்த வருகின்ற நிலையில் இந்த பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 8.90 லட்சத்தில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் தயார்நிலையில் உள்ளதால் விரைவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளதாக ட்ரையம்ப் இந்தியா நிர்வாக இயக்குநர் விமல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2017 Triumph street triple image gallery

Exit mobile version