2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 bajaj pulsar 150

கிளாசிக் லுக்கில் தொடர்ந்து கிடைக்கின்ற பஜாஜின் பல்சர் 150 பைக்கில் மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்று விலை ரூ. 1,08,772 முதல் டாப் வேரியண்ட் ட்வீன் டிஸ்க் கொண்டது  ரூ. 1,15,481 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய டிசைனில் அறிமுகமாகி வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் வந்துள்ள இந்த பைக்கின் முழு விவரங்களை இங்கே காண்போம்.

Bajaj Pulsar 150

பல்சர் N150 மற்றும் N160 மாடல்களில் உள்ளதைப் போன்ற முழுமையான டிஜிட்டல் எல்சிடி (LCD) திரை கொடுக்கப்பட்டிருக்கின்றது, முன்பாக அனலாக் மீட்டர் இடம்பெற்றிருந்தது. இனி ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் திரையிலேயே அறிந்துகொள்ளலாம். மேலும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியும், கூடுதலாக செல்போன் சார்ஜ் செய்ய USB சார்ஜிங் போர்ட் வசதியும் உள்ளது.

இரவு நேரப் பயணங்களில் சிறந்த வெளிச்சத்தைத் தரும் வகையில் பழைய ஹாலஜன் விளக்குகளுக்குப் பதிலாக, இப்போது முகப்பு விளக்கு எல்இடி ஆகவும் டர்ன் இன்டிகேட்டர் அனைத்தும் எல்இடி தொழில்நுட்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, நீளம் மற்றும் சாம்பல் நிறங்களுடன் கருப்பு கலந்த புதிய வண்ணக் கலவைகளில் இந்த 2026 பல்சர் 150 பைக் கிடைக்கிறது.

வழக்கமான அதே, 149.5cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் ஆகும், இது 8,500 ஆர்பிஎம்மில் 13.8 BHP பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 13.25Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் 260 மிமீ டிஸ்க், மற்றும் பின்புற டிரம் மூலம் ஒற்றை-சேனல் ஏபிஎஸ் மூலம் கையாளப்படுகின்றன, அதே நேரத்தில் சஸ்பென்ஷனில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் ட்வின் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் உள்ளன.

Exit mobile version