நவி அட்வென்ச்சர் மற்றும் க்ரோம் எடிசன் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா நவி மாடலில் அட்வென்ச்சர் மற்றும் க்ரோம் என்ற பெயரில் இரு பதிப்புகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நவி அட்வென்ச்சர் மாடலில் கூடுதலான துனை கருவிகள் மற்றும் வண்ணங்களை பெற்றுள்ளது.

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக விற்பனைக்கு வந்த ஹோண்டா நவி இந்திய ஹோண்டா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் தயாரிக்கப்பட்ட மாடலாகும். ஆக்டிவா ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே ஹெச்இடி  110சிசி எஞ்சின் 8 பிஹெச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது.

நவி அட்வென்ச்சர் மற்றும் க்ரோம்

சாதரன மாடலில் இருந்து வித்தியாசப்படும் வகையில் அட்வென்ச்சர் எடிசன் மாடலில் ரூ. 8525 மதிப்புள்ள கைப்பிடிகளுக்கு விசேஷ கவர்கள் , இருக்கை கவர் , ஹெட்லைட் புராடெக்டர் , லக்கேஜ் பாக்ஸ், புதிய பாடி ஸ்டிக்கர்கள் பெற்று கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

நவி க்ரோம் எடிசன் மாடலில் ரூ. 5065 மதிப்புள்ள ஹெட்லைட் புராடெக்டர் , லக்கேஜ் பாக்ஸ், புதிய பாடி ஸ்டிக்கர்கள் , ரியர் கிரிப் மற்றும் அன்டர் கார்டு போன்றவற்றை பெற்று கருப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

ஹோண்டா நவி விலை பட்டியல்

சாதரன நவி – ரூ. 39,648

நவி க்ரோம் எடிசன் – ரூ. 44,713

நவி அட்வென்ச்சர் எடிசன் – ரூ. 48,173

(அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை )

Share