Automobile Tamilan

பி.எஸ் 3 பைக்குகள் ஸ்டாக் இல்லையா..?

உச்சநீதிமன்ற தடையை தொடர்ந்து பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள் அதிகபட்ச சலுகைகளை வழங்கியதை தொடர்ந்து அதிகப்படியான டீலர்கள் வசம் பி.எஸ் 3 வாகனங்கள் இருப்பு இல்லை என்றே பதிலே பெரும்பாலும் கிடைக்கின்றதாம்.

பி.எஸ் 3 பைக்குகள்

ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.

ஹீரோ , ஹோண்டா ,பஜாஜ் , டிவிஎஸ் என அனைத்து முன்னணி வாகன தயாரிப்பாளர்களும் அதிகபட்சமாக ரூ.22,000 வரை சலுகைகள் மற்றும் இலவச வாகன காப்பீடு என அதிரடியை இரு தினங்களாக கிளப்பியதை தொடர்ந்து பொரும்பாலான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நவி சில இடங்களில் ரூ.25,000 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.

அதிகப்படியான டீலர்களிடம் நாம் விசாரித்த பொழுது ஸ்டாக் இல்லை என்ற பதிலே  கிடைக்கின்றது. ஒரு சில டீலர்களிடம் மிக சொற்ப எண்ணிக்கையிலே வாகனங்கள் இருப்பதாக பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவே தகவல்கள் தருகின்றனர்.

காத்திருங்கள் முழுமையான உண்மை தகவல்கள் விரைவில் வெளியாகும்.. உங்கள் ஊரில் என்ன நிலைமை என்பதனை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யுங்கள்.

Exit mobile version