Categories: Bike News

வெஸ்பா 150சிசி VXL மற்றும் SXL விற்பனைக்கு வந்தது

பியாஜியோ வெஸ்பா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மற்றும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு வந்தது. வெஸ்பா ஸ்கூட்டர்கள் தோற்ற மாற்றங்கள் மற்றும் 150சிசி என்ஜினை பெற்றுள்ளது.
04ce9 vespa sxl 125
வெஸ்பா 125சிசி SXL

மிகவும் பிரபலமான கால்பந்து வீரர் அலக்சாண்டரா டெல் பியரோ அவர்களை தனது விளம்பர தூதராக நியமித்துள்ள வெஸ்பா அவரை கொண்டு தனது மேம்படுத்தப்பட்ட VXL மற்றும் SXL ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

தோற்ற மாற்றங்களை பெற்றுள்ள வெஸ்பா ஸ்கூட்டர்கள் சிறப்பான கிளாசிக் தோற்றத்துடன் மிக நேரத்தியாக விளங்குகின்றது. முகப்பு விளக்குகளை சுற்றி குரோம் பட்டை , புதிய வடிவ இன்டிகேட்டர் , ஹார்ன் கேஸ் , ஸ்டீல் கிராப் ரெயில் , பில்லன் ரைடர் , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் டெயில் விளக்கு போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா ஸ்கூட்டர்களில் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பினை மேம்படுத்தியுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் உள்ளது.

வெஸ்பா 150 VXL மற்றும் SXL ஸ்கூட்டரில் 11.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை சிலிண்டர் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 11.5 என்எம் ஆகும். இதில் சிவிடி தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளது.

வெஸ்பா 125 VXL மற்றும் SXL ஸ்கூட்டரில் 10பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை சிலிண்டர் 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 10.6 என்எம் ஆகும். இதில் சிவிடி தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளது.

வெஸ்பா 150சிசி SXL

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் விலை (ex-showroom Pune)

  • வெஸ்பா VXL 125 cc – ரூ.77,308
  • வெஸ்பா SXL 125 cc – ரூ. 81,967
  • வெஸ்பா VXL 150 cc – ரூ. 84,641
  • வெஸ்பா SXL 150 cc – ரூ. 88,696
Vespa 150cc VXL and SXL launched in India
Share
Published by
MR.Durai
Tags: Vespa