ஹீரோ ஸ்பிளென்டர் புரோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ. 46,850 விலையில் சற்றுமுன் விற்பனைக்கு வந்துள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் புரோ முந்தைய மாடலை விட சிறப்பான தோற்ற பொலிவினை பெற்றுள்ளது.
ஹீரோ ஸ்பிளென்டர் புரோ
புதிய ஹீரோ ஸ்பிளென்டர் புரோ 

தோற்ற அமைப்பில் பல மாற்றங்களை கண்டுள்ள புதிய ஸ்பிளென்டர் புரோ என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பைக் மொத்தம் 8 விதமான வண்ணங்களில் வந்துள்ளது.

புதிய ஸ்பனென்டர் புரோ பைக்கில் மாற்றங்கள் என்ன

 • புதிய முகப்பு விளக்கு வடிவம் மற்றும் தெளிவான லென்ஸ் இன்டிகேட்டர் 
 • புதிய பாடி பேனல்கள் 
 • புதிய வடிவ பெட்ரோல் டேங்க்
 • மூன்று பிரிவுகளை கொண்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் உடன் சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர் 
 • புதிய வின்ட்ஷில்டூ டிசைன்
 • குரோம் பூச்சினை பெற்றுள்ள புகைப்போக்கி மற்றும் யுட்டிலிட்டி பாக்ஸ்
 • அகலமான இருக்கை மற்றும் சில்வர் கிராப் ரெயில்
 • பாடி வண்ணத்தில் பின்புறம் பார்க்கும் கண்ணாடி
 • இரண்டு புதிய வண்ணங்கள் ஷில்டு கோல்ட் மற்றும் சிவப்பு
 • புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரிங்
 • ஸ்போர்ட்டிவ் டெயில் விளக்கு
8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 97சிசி APDV என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8 என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மொத்தம் 8 வண்ணங்களில் வந்துள்ள புதிய ஸ்பிளென்டர் புரோ பைக்கில் 4 விதமான வேரியண்டில் வந்துள்ளது.
புதிய ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பைக் விலை ரூ. 46,850 (ex-showroom Delhi)

புதிய ஸ்பிளென்டர் புரோ தவிர ஸ்பிளென்டர் + பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் பைக்கில் புதிய இரண்டு வண்ணங்கள் வரவுள்ளது. மேலும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த மேஸ்ட்ரோ எட்ஜ் இன்று முதல் டெலிவரி தொடங்குகின்றது.

ஸ்பிளென்டர் வரிசை பைக்குகள் 1994ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது. இதுவரை 2.5 கோடி  ஸ்பிளென்டர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது.

Hero Splendor Pro facelift launched in India
Exit mobile version