ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் பற்றி 5 முக்கிய விஷயங்கள்

125 சிசி சந்தையில் மிகவும் ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா கிரேஸியா ரூ.60, 277 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிரேஸியா ஸ்கூட்டர் பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

கிரேஸியா ஸ்கூட்டர்

இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவிதத்துக்கு கூடுதலான மதிப்பை பெற்று விளங்கும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய கிளிக் ஸ்கூட்டரை தொடர்ந்து நகர்புற மக்களுக்கு ஏற்ற வகையிலான அம்சங்களை கொண்டதாக கிரேஸியா ஸ்கூட்டர் அமைந்துள்ளது.

சந்தையில் 125 சிசி ஆக்டிவா ஸ்கூட்டரை தொடர்ந்து டியோ ஸ்கூட்டரின் பின்னணியாக கொண்டதாக அமைந்திருக்கின்ற கிரேஸியா ஸ்கூட்டர் மிக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரேஸியாவில் ஆரஞ்சு, கருப்பு, சிவப்பு, வெள்ளை, கிரே மற்றும் நீலம் ஆகிய நிறங்களுடன் கிடைக்கும்.

டிசைன்

டியோ ஸ்கூட்டரின் தோற்ற உந்துதலை பின்புலமாக கொண்டு மிகவும் ஸ்டைலிசாக வடிவமைக்கபட்டுள்ள கிரேஸியாவில் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

முகப்பில் மிக நேர்த்தியான வி வடிவத்தை வெளிப்படுத்தும் எல்இடி ஹெட்லேம்ப் இணைக்கப்பட்டு இரட்டை நிற கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் பல்வேறு வசதிகளை வெளிப்படுத்தும் அம்சத்துடன் , மொபைல் போன் வைப்பதற்கான க்ளோவ் பாக்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள ஹெச்இடி நுட்பத்துடன் கூடிய 124.9 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.5hp ஆற்றல் மற்றும் 10.54Nm டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை எடுத்துச் செல்ல சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மிக சிறப்பான வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த எஞ்சின் எரிபொருள் சிக்கனம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர்,ஸ்பீட், ட்ரீப் மீட்டர், மைலேஜ் ஆகிய அம்சங்களுடன் மூன்று வகையான ஈக்கோ இன்டிகேட்டர் வசதியை கொண்டுள்ளது. மேலும் கூடுதல் வசதியாக 12 வோல்ட் சாக்கெட் பெற்ற சார்ஜருடன் கூடிய மொபைல் போன் க்ளோவ் பாக்ஸ் கூடுதல் ஆக்செரிஸாக வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் கூடுதல் ஆப்ஷனலாக 190 மிமீ டிஸ்க் பிரேக் அல்லது 130 மிமீ டிரம் பெற்றதாகவும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.  மேலும் ஹோண்டாவின் காம்பி பிரேக் சிஸ்டம் மூன்று வேரியன்டிலும் கிடைக்கின்றது. இரண்டு பேஸ் வேரியன்ட்களில் ஸ்டீல் வீல்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், டாப் வேரியன்டில் அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது.

107 கிலோ எடை கொண்டுள்ள கிரேஸியா ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 88 கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஸ்டான்டர்டு , ஸ்டான்டர்டு அலாய் மற்றும் டீலக்ஸ்  ஆகிய மூன்று வேரியன்ட்களில் கிடைக்கின்றது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனையில் உள்ள சுசூகி ஆக்செஸ் 125, ஹோண்டா ஆக்டிவா 125 ஆகிய இரண்டு மாடல்களுடன் சந்தையை கிரேஸியா ஸ்கூட்டர் பகிர்ந்து கொள்ள உள்ளது.

கிரேஸியா விலை

ஆக்செஸ் 125 மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களுக்கு மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிரேஸியா ஸ்கூட்டரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் வேரியன்ட் வாரியாக பின்வருமாறு ;-

Honda Grazia Standard Honda Grazia Alloy Honda Grazia Deluxe
ரூ.60,277 ரூ.62,208 ரூ.64,649

(சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை )