ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் ரூ.89,872 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக்கில் 15.7 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் மிக நேர்த்தியான ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. கூர்மையான தோற்ற அமைப்பினை கொண்டுள்ள  சிபி ஹார்னட் 160R  பைக்கில் 162.71சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 15.7 பிஹெச்பி மற்றும் டார்க் 14.70 என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மிக நேர்த்தியான முகப்பு விளக்கு , சிறப்பான பெட்ரோல் டேங்க் தோற்றம் , 5 மல்டி ஸ்போக் அலாய் வீல் , டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்,  X வடிவ டெயில் விளக்கு போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் மோனோசாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்புறத்தில் 276மிமி டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் மற்றும் 240மிமீ டிஸ்க் பிரேக்குடன் இணைந்த சிபிஎஸ் என இரண்டு ஆப்ஷனில் உள்ளது.

சிங்கிள் டிஸ்க் வேரியண்ட் மற்றும் டியூவல் டிஸ்க் மற்றும் சிபிஎஸ் வேரியண்ட் என இரண்டு விதமான வேரியண்டில்  சிபி ஹார்னட் 160R கிடைக்கும்.

முதற்கட்டமாக சென்னை உள்பட 21 நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா சிபி ஹார்னட் 160R 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை ஆரஞ்ச் , வெள்ளை , நீலம் , சிவப்பு மற்றும் கருப்பு ஆகும்.

ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக்கின் போட்டியார்கள் பஜாஜ் பல்சர் 150ஏஎஸ் , சுசூகி ஜிக்ஸெர் மற்றும் யமஹா FZ- S v2.0.

ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் விலை

ஹோண்டா சிபி ஹார்னட் 160R டிரம் – ரூ.89,872

ஹோண்டா சிபி ஹார்னட் 160R டிஸ்க் சிபிஎஸ் – ரூ.94,785

{அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை விபரம் }

Honda CB Hornet 160R bike launched Chennai on-road price list and image gallery

[envira-gallery id=”4234″]

Share