பி.எஸ் 3 வாகனங்களை ஏப்ரல் 1ந் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பி.எஸ் 3 பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
பி.எஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின்களை பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒருநாள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில் அதிரடி சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
மேலும் டுகாட்டி போன்ற பிரிமியம் பைக் தயாரிப்பாளர் தங்களுடைய மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.7 லட்சம் வரை சலுகைகள் வழங்கியுள்ளனர். ட்ரையம்ப் நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகளுக்கு ரூ. 3 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிஎஸ் 3 வாகனங்களை வாங்கலாமா ?
தாராளமாக பிஎஸ் 3 பைக்குகள் மற்றும் கார்களில் எவ்விதமான தொல்லைகளும் வராது. முன்னணி மாநகரங்களிலும் இந்த வாகனங்களை தற்பொழுது தாராளமாக பயன்படுத்தலாம் என்பதனால் இந்த சலுகையை பயன்படுத்தி நாளை அதாவது மார்ச் 31ந் தேதிக்குள் வாகனத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 1 முதல் பிஎஸ்3 வாகனங்களை பதிவு செய்ய இயலாது.