Automobile Tamil

இந்தியாவில் யமஹா ஆர்3 பைக் நீக்கம் ஏன் ?

இந்திய சந்தையிலிருந்து யமஹா ஆர்3 ஸ்போர்ட்டிவ் பைக் டாடல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பி.எஸ் 4 நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து பி.எஸ் 3 எஞ்சினை பெற்றிருந்த ஆர்3 மாடல் நீக்கப்பட்டுள்ளது.

 யமஹா ஆர்3 பைக்

ஆர்3 பைக் மாடலில் 41.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.  டைமன்ட் டைப் பிரேம் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , 7 விதமான அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட மோனோ- சாக்அப்சார்பர் பின்புறத்தில் உள்ளது.

ஏப்ரல் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ் 4 நடைமுறையை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி தடை விதித்ததை தொடர்ந்து மாபெரும் சலுகை விலையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது.

தற்காலிகமாக இந்திய சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள யமஹா ஆர்3 அடுத்த சில மாதங்களுக்குள் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற மாடலாக கூடுதலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏப்ரல் 1, 2017 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களும் பி.எஸ் 4 எஞ்சின் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை பெற்றிருக்கும்.

Exit mobile version