Site icon Automobile Tamilan

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் மேட் பிளாக் நிறம் அறிமுகம்..!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டோமினார் 400 பைக்கில் கூடுதலாக மேட் பிளாக் நிறம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. தற்போது டாமினார் 400 வெள்ளை, நீலம், கருப்பு மற்றும் டிவைலைட் பிளம் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

பஜாஜ் டோமினார் 400

பஜாஜின் மாடர்ன் பவர் க்ரூஸர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட டோமினார் 400 சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் மூன்று வண்ணங்கள் வரை கிடைத்து வந்த பைக்கில் தற்போது கூடுதலாக மேட் பிளாக் நிறம் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் காப்புரிமை பெற்ற டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 34.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0  முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டாமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிலோமீட்டர் ஆகும்.

முன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்பக்கத்தில் மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பரினை கொண்டுள்ளது. எம்ஆர்ஃஎப் சி1 டயர்களை பெற்றுள்ள டோமினார் 400 பைக்கின் முன்பக்க டயர் அளவு – 110/70 R17 Radial பின்பக்கம் டயர் அளவு  150/60 R17 Radial அளவினை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 320 மிமீ சிங்கிள் டிஸ்க்பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலை நிரந்தர அம்சமாக கொண்டுள்ளது.

விலை விபரம்

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.41,290 லட்சம் (ஏபிஎஸ் இல்லாத மாடல்)

பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.55,451 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)

(தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்)

Exit mobile version