பல்சர் ஆர்எஸ்200 சிவப்பு-வெள்ளை நிறத்தில் வருகை

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஸ்போர்ட்டிவ் பைக்கின் புதிய சிவப்பு- வெள்ளை கலந்த நிறத்தில் கொலம்பியாவில் நடக்கும் வர்த்தக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் கருப்பு , மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கின்றது.

இரட்டை வண்ணத்தில் அமைந்துள்ள பல்சர் ஆர்எஸ் 200 கொலம்பியாவில் விற்பனைக்குஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான ஸ்டைலிங் வடிவ தாத்பரியங்களை கொண்டு இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களை பெற்றுள்ள பல்சர் ஆர்எஸ்200 பைக் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆர்எஸ்200 இஞ்ஜின்

24.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5 சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 18.6 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடல் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் சிறப்பான பெயின்ட் வேலைப்பாடுகளை மட்டுமே பெற்றுள்ள ஆர்எஸ்200 பைக்கின் ரெட்-வெள்ளை கலந்த வண்ணத்தின் விலை மற்ற வண்ணங்களை விட சற்று கூடுதலான விலையில் இருக்கலாம்.

Exit mobile version