Automobile Tamilan

ஹீரோ டூயட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஹீரோ டூயட் ஸ்கூட்டர்  ரூ.48,400 தொடக்க விலையில் சற்றுமுன் விற்பனைக்கு வந்துள்ளது. மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை தொடர்ந்து  மெட்டல் பாடி டூயட் ஸ்கூட்டர் வந்துள்ளது.

89648 hero duet launched

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் மாடலை தொடர்ந்து டூயட் ஸ்கூட்டர் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்கி வந்துள்ளது.

டூயட் ஸ்கூட்டரில் 110.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 8.30என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 63.8கிமீ ஆகும்.

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை போல அல்லாமல் மெட்டல் பாடியுடன் டூயரட் வந்துள்ளதால் 6கிலோ வரை எடை கூடுதலாக உள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் சாக் அப்சார்பர்களை பெற இயலும். டீயூப்லஸ் டயர் மற்றும் இன்கிரேட்டடு பிரேக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக பெற இயலும். டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் சர்வீஸ் ரிமைன்டரை பெற இயலும்.

ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் இரண்டு விதமான வேரியண்ட்களில் பல விதமான நவீன வசதிகளான மொபைல் சார்ஜிங் போர்ட் , இருக்கை அடியில் உள்ள லக்கேஜ்க்கான விளக்கு , பின்புற லக்கேஜ் ஹூக் போன்றவை டாப் VX வேரியண்டில் நிரந்தர அம்சமாக உள்ளது. LX பேஸ் வேரியண்டில் துனைகருவிகளாக பெற்று கொள்ளலாம்.

சிவப்பு , வெள்ளை ,  கருப்பு , பச்சை மற்றும் கிரேஸ் கிரே என மொத்தம் 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

ஹீரோ டூயட் ஸ்கூட்டர்  விலை 

டூயட் LX  ; ரூ. 48,400
டூயட் VX : ரூ. 49,900

( பெங்களூரு எக்ஸ் ஷோரூம்)

Hero Duet scooter launched priced at Rs 48,400

Exit mobile version