Site icon Automobile Tamilan

ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் புதிய நிறம் அறிமுகம்

ஹோண்டா டூ வீலர் நிறுவனத்தின் ட்ரீம் யுகா பைக்கில் புதிய இரட்டை வண்ண கலவையில் புதிய வண்ணத்தை சேர்த்துள்ளது விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. ஹோண்டா ட்ரீம் யுகா விலை ரூ. 60,776  ஆகும்.

லிட்டருக்கு 74 கிமீ தரவல்ல ஹெச்இடி ( HET – Honda Eco Technology) நுட்பத்தினை கொண்டுள்ள 8.25 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.63 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பூளூ வித் அதெலட்டிக் பூளூ மெட்டாலிக் வண்ணத்துடன் சேர்த்து கருப்பு , சிவப்பு , வெள்ளை , கருப்பு கலந்த ரெட் மெட்டாலிக் மற்றும் கருப்பு கலந்த கிரே மெட்டாலிக் என மொத்தம் 6 நிறங்களில் ட்ரீம் யுகா பைக் விற்பனைக்கு கிடைக்கின்றது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் ஸ்பீரிங் லோடேட் ஹைட்ராலிக் மற்றும் இரு டயர்களிலும் 130மிமீ டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது. டியூப்லெஸ் டயர் , பராமரிப்பு இல்லாத பேட்டரி போன்வற்றை பெற்றுள்ளது. விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் புதிய வண்ணம் கிடைக்கும்.

ஹோண்டா ட்ரீம் யுகா விலை ரூ. 60,776 ( சென்னை ஆன்ரோடு விலை )

Exit mobile version