எஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது

கடந்த ஜூன் 2018 முதல் தயாரிக்கப்பட்ட யமஹா எஃப்இசட் 25 மற்றும் யமஹா பேஸர் 25 என இரு பைக்குகளிலும் சுமார் 13,428 எண்ணிக்கையிலான பைக்குகளில் ஏற்பட்டுள்ள என்ஜின் ஹெட் கவர் போல்ட் தொடர்பான கோளாறுக்கு என திரும்ப அழைக்கப்படுவதாக இந்தியா யமஹா மோட்டார் அறிவித்துள்ளது.

250சிசி என்ஜின் பெற்ற இரு பைக்குகளும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. இந்தியா யமஹா மோட்டார் உடனடியாக செயல்முறைக்கு வரும் வகையில் இந்தியாவில் யமஹா எஃப்இசட் 25 மற்றும் யமஹா பேஸர் 25 ஆகியவற்றை முன்னெச்சரிக்கையாக ரீகால் செய்வதாக அறிவித்துள்ளது. ஜூன் 2018 முதல் தயாரிக்கப்பட்ட 13,348 யூனிட் மோட்டார் சைக்கிள்களில் [12,620 யூனிட் எஃப்இசட் 25 மற்றும் 728 யூனிட் ஃபேஸர் 25] “ஹெட் கவர் போல்ட்” தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இநிறுவனம் தன்னார்வ முறையில் இலவசமாக கோளாறினை நீக்க சர்வீஸ் மேற்கொள்ளுகின்றது. பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக சரிசெய்யப்படும் யமஹா அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் வாயிலாக உரிமையாளர்கள் தனித்தனியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள். என குறிப்பிட்டுள்ளது.

யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் யமஹா நிறுவனம், பிஎஸ்6 யமஹா எஃப் இசட் மற்றும் எஃப்இசட் – எஸ் பைக்குகளை விற்பனைக்ககு வெளியிட்டிருந்தது.

Exit mobile version