2016 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டர் அறிமுகம்

ரூ.42,408 விலையில் புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளம் பெண்களை கவரும் வகையில் 11 விதமான வண்ணங்களில் ஸ்கூட்டி பெப் பிளஸ் கிடைக்கின்றது.

மிக குறைவாக 95 கிலோ எடை கொண்டுள்ள டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரில் 5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 87.8சிசி புதிய இகோதிரஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 5.8 Nm  ஆகும். மிக சிறப்பான மைலேஜ் மற்றும் சிறப்பான வேகத்தினை பெறும் வகையில் இருவிதமான டிரைவிங் மோடினை கொண்டுள்ளது. அவை பவர் மோட் மற்றும் எக்கனாமிக் மோட் ஆகும்.

மேலும் மொபைல் சார்ஜிங் வசதி , சைட் ஸ்டேன்ட் அலாரம் , இருக்கையின் அடியில் ஸ்டோரேஜ் வசதி , இரு டயர்களிலும் 110மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மிக இலகுவாக சென்டர் ஸ்டேட் போடும் வகையில் டிவிஎஸ் நிறுவனத்தின் பேட்னட் பெறப்பட்ட ஈசி ஸ்டேன்ட் டெக்னாலஜி பெற்றுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள 1 வண்ணத்துடன் சேர்த்து மொத்தம் 11 வண்ணங்களில் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டர் கிடைக்கின்றது.  டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் சென்னை எக்ஸஃஷோரூம் விலை ரூ.42,408 ஆகும்.

[envira-gallery id=”7068″]

Exit mobile version