2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ விற்பனைக்கு வந்தது

கூடுதலான 3 புதிய வண்ணங்களுடன் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் 2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் மெட்டாலிக் பாடி கொண்டதாகும்.

8 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 109.2சிசி ஹெச்இடி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் இழுவைதிறன் 8.74 Nm ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரு வேரியண்டிலும் வண்ணங்களை பெற்றுள்ளது.

ஸ்டான்டர்ட் ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரில் புதிதாக மஞ்சள் மற்றும் நீளம் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய வண்ணங்களான வெள்ளை மற்றும் கருப்பு தொடர்கின்றது. மேலும் ஆக்டிவா-ஐ டீலக்ஸ் வேரியண்டில் புதிய மெட்டாலிக் சிவப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய வண்ணங்களான பர்பிள் மற்றும் வெள்ளை வண்ணங்கள் தொடர்கின்றது.

2016 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விலை ரூ.50,,255 (எக்ஸ்ஷோரூம் மும்பை )

பிரசத்தி பெற்ற ஆக்டிவா ஐ ஸ்கூட்டருடன் ஹீரோ டூயட் , டிவிஎஸ் வீகோ மற்றும் சுசூகி லெட்ஸ் போன்ற மாடல்கள் சந்தையை பகிர்ந்து கொள்கின்றன.

Share