2017 பஜாஜ் பல்சர் 180 ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் வருகை

பிரபலமான பஜாஜ் பல்சர் அணிவரிசையில் அமைந்துள்ள பஜாஜ் பல்சர் 180 பைக்கின் ஸ்பை வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 2017 பல்சர் 180 பைக்கில் ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் வரவுள்ளது.

 

இளைஞர்களின் மிக விருப்பமான பல்சர் பைக்குகளில் மிகவும் பிரசத்தி பெற்ற பல்சர் 180 பைக்கில் முந்தைய 180சிசி DTSi எஞ்சினை மேம்படுத்தி பிஎஸ்4 தரத்துடன் 17 hp ஆற்றலுடன் 14Nm டார்கினை வெளிப்படுத்தும் வகையிலே அமைந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

பெரிதாக தோற்ற மாற்றங்கள் இல்லாமல் சிறிய அளவிலான மாற்றங்களுடன் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் கூடுதல் வண்ணங்கள் போன்றவற்றை பெற்றிருக்கும் பல்சர் 180யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 230மிமீ பின்புற டயர்களுக்கான டிஸ்க் பிரேக் ஆனது பல்சர் 220F பைக்கில் இடம்பெற்றுள்ள அதே டிஸ்க் பிரேக் ஆகும்.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ் போன்றவை மேம்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் பல்சர் 180 பைக் டீலர்களுக்கு வர தொடங்கி விடத்தால் அடுத்த சில வாரங்களில் முறைப்படி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

விற்பனையில் உள்ள பஜாஜ் பல்சர் 180 மாடலை விட ரூ.4000 வரை கூடுதலான விலையில் புதிய பல்சர் 180 வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க : புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் விலை பட்டியல்

Share