57,775 ரூபாய்க்கு புதிய ஹீரோ கிளாமர் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ரூபாய் 57,755 விலையில் 2017 ஹீரோ கிளாமர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 125சிசி சந்தையில் முதன்மையான மாடலாக கிளாமர் பைக் விளங்குகின்றது.

புதிய ஹீரோ கிளாமர் பைக்

புதிய பைக்கிற்கு டீலர்கள் வாயிலாக , முன்பதிவு செய்ய ரூபாய் 1000 செலுத்தி பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில் அதிகபட்சமாக 25 நாட்களுக்குள் டெலிவரி கொடுப்பட்டு விடும் என டீலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து 125சிசி சந்தையில் அதிக வரவேற்பினை தக்க வைத்துக் கொண்டுள்ள கிளாமர் பைக் முடிவடைந்த 16-17 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் 125சிசி சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற பைக் மாடலாக சியாம் (இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சம்மேளனம்) அறிக்கை தெரிவிக்கின்றது.

டிரம் பிரேக் , டிஸ்க் பிரேக் மற்றும் எஃப்ஐ எனப்படும் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷ்ன் பொருத்தப்பட்ட மாடல் என மொத்தம் மூன்று விதமான வகைகளில் புதிய ஹீரோ கிளாமர் பைக் கிடைக்க உள்ளது.

டிரம் அல்லது டிஸ்க் பிரேக் என இரு வகைகளிலும் கார்புரேட்டர் எஞ்சின் கிடைகின்ற நிலையில், டிஸ்க் பிரேக் வகையில் மட்டுமே  எஃப்ஐ எனப்படும் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷ்ன் மாடல் கிடைக்க உள்ளது.

ஹீரோ கிளாமர் 125சிசி கார்புரேடர் மற்றும் எஃப்ஐ எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் 11.4 bhp (8.5 kW) @ 7500 rpm பவரும் , 11 Nm @ 6500 rpm டார்க்கையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலை விட புதிய என்ஜினில் 27 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 6 சதவீத கூடுதல் டார்க் வெளிப்படுத்தும். இதுதவிர  எரிபொருள் சிக்கனம் கார்புரேட்டர் இடம்பெற்றுள்ள மாடலில் 3 சதவீதமும்  எஃப்ஐ மாடலில் 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்புரேட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும், எஃப்ஐ மாடல் மைலேஜ் லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் என ஹீரோ தெரிவிக்கின்றது.

ஹீரோ நிறுவனத்தின் காப்புரிமை பெறப்பட்ட ஐ3எஸ் எனப்படும் ஸ்டார் ஸ்டாப் நுட்பத்தை பெற்றுள்ள புதிய பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப் ,  தானியங்கி ஹெட்லேம்ப் ஆன் வசதி (AHO) மற்றும் டார்க் ஆன் டிமான்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

புதிய ஹீரோ கிளாமர் விலை பட்டியல்

வேரியன்ட் விலை விபரம்
டிரம் பிரேக் ரூ. 57,755
டிஸ்க் பிரேக் ரூ. 59,755
FI டிஸ்க் பிரேக் ரூ 66,580

(விலை டெல்லி எக்ஸ-ஷோரூம் )

புதிய கிளாமர் பைக் படங்கள்
Exit mobile version