2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

160 சிசி சந்தையில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் 2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் பற்றி பல்வேறு முக்கிய விபரங்கள் உட்பட சிறப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அப்பாச்சி பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வரிசையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அதனை தொடர்ந்து அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி RTR 200 4V ஆகிய மாடல்களை தொடர்ந்து முழுமையாக அலங்கரிக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அப்பாச்சி 200 பைக்கின் தோற்ற அமைப்பின் உந்துதலை பின்னணியாக கொண்டு கூடுதலான தோற்ற மாற்றங்கள் மற்றும் நுட்பம் தொடர்பான மாற்றங்களை பெற்ற 2018 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஆகியற்றுடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகளை பெற்ற இரண்டு பிரிவுகளில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பாச்சி 160 ஸ்டைல்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் மாடலின் தோற்ற உந்துதலை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள புதுப்பிகப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் மிக கூர்மையான தோற்ற பொலிவினை வழங்கவல்ல பெட்ரோல் டேங்க் பெற்று  மிக நேர்த்தியான ஹெட்லைட் , டெயில் லைட் ஆகியவற்றுடன் இரட்டை குழல் பெற்ற சைலன்சரை பெற்று புதுப்பிக்கப்பட்ட புதுவிதமான ஆலாய் வீலை பெற்று விளங்குகின்றது.

அப்பாச்சி 160 பைக்கில் ரேசிங் சிவப்பு, மெட்டாலிக் நீலம் மற்றும் நைட் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது

அப்பாச்சி 160 எஞ்சின்

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட புதிய 160 சிசி எஞ்சின் முந்தைய எஞ்சினை காட்டிலும் கூடுதலான வகையில் ஆற்றல் மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ஆயில் கூலிங் நுட்பத்தை பெற்ற நான்கு வால்வுகளை (4V) கொண்ட டெக்னாலாஜி முறையை பெற்றதாக கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் கார்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 16.5hp பவர் , 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. மேலும் ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மாடல் அதிகபட்சமாக 16.8hp பவர் , 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.  இரு மாடல்களும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

அப்பாச்சி 160 வசதிகள்

மிக சிறப்பான ரைடிங் ஸ்டைல் பொசிஷன் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள அப்பாச்சி 160 பைக்கில் மிக நேர்த்தியான முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்று ஒற்றை இருக்கை அமைப்புடன், 800 மிமீ இருக்கை உயரம் பெற்ற அப்பாச்சி 160 பைக்கில் டிரம் பிரேக் மாடல் 145 கிலோ எடை, டிஸ்க் பிரேக் மாடல் 145 கிலோ எடையை பெற்று பெட்ரோல் டேங்க் கொள்ளவை 12 லிட்டர் பெற்று விளங்குகின்றது.

புதிய அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் 33 மிமீ ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் முதன்முறையாக மோனோ ஷாக் அப்சார்பரை அப்பாச்சி 160 பெற்று  விளங்குகின்றது. மேலும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை.

அப்பாச்சி 160 போட்டியாளர்கள்

யமஹா FZ-S FI, ஹோண்டா ஹார்னெட் 160R, பஜாஜ் பல்சர் 160NS, மற்றும் பிரபலமான சுஸூகி ஜிக்ஸெர் ஆகியவற்றுடன் புதிதாக வெளியான ஹோண்டா எக்ஸ்-பிளேடு ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மிகவும் சவாலை வழங்கவல்லதாக உள்ளது.

அப்பாச்சி 160 பைக் விலை

போட்டியாளர்களுக்கு மிக சவாலை ஏற்படுத்தும் விலையில் வெளியிடப்பட்டுள்ள அப்பாச்சி 160 பைக் மிக சிறப்பான வசதிகளை கொண்டதாக 160சிசி சந்தையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் அனுபவத்தினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலின் வேரியன்ட் வாரியான விலை பட்டியல் பின் வருமாறு ;-

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V –  ரூ. 81,490 (carb front disk brake version)

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V  – ரூ. 84,490 (Carb double disc version)

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V  – ரூ. 89,990 ( EFi double disc version)

( எக்ஸ்-ஷோரூம் விலை )

Exit mobile version