Automobile Tamilan

2019 பஜாஜ் டோமினார் 400 பைக் விலை மற்றும் சிறப்புகள்

446f6 2019 bajaj dominar 400 abs

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கில் மேம்படுத்தப்பட்டு புதிய என்ஜின் பொருத்தப்பட்டு, சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டதாக வந்துள்ளது.

முந்தைய மாடலை விட ரூ.11,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை ரூ.1.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் சிறப்புகள்

கடந்த 2016 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு மாடலை விட பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வந்துள்ள புதிய மாடலின் மாற்றங்களை தொடர்ந்து காணலாம்.

என்ஜின் மாற்றங்கள்

2016 ஆம் ஆண்டு வெளியான மாடலில் SOHC பெற்ற என்ஜினில் தற்போது  DOHC உடன் டோமினார் 400-யில் 373 சிசி என்ஜின் மூன்று ஸ்பார்க் பிளக்குகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டு பவர் 4.9 PS வரை அதிகரிக்கப்பட்டு , தற்போது 39.9 PS பவரினை 8650 ஆர்பிஎம் மூலம் வெளிப்படுத்துகின்றது. சிறப்பான வகையில் டார்க் சார்ந்த மேம்பாட்டை பெற்று 7000 rpmயில் 35 Nm வழங்குகின்றது. டார்கில் எந்த மாற்றங்கள் இல்லை. அதே போல 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

டோமினார் 400 கிளஸ்ட்டர்

இரண்டு கிளஸ்ட்டர்கள் பெற்றிருக்கின்றது. டோமினாரில் நவீன வசதியை பெற்ற டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், இரண்டாவது கிளஸ்ட்டராக வழங்கப்பட்டுள்ள இடத்தில் எரிபொருள் கலனில் இணைக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கின்றது.

சஸ்பென்ஷன் மாற்றங்கள்

சஸ்பென்ஷன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, முந்தைய மாடலை விட சிறப்பான சொகுசு தன்மை வழங்கும் வகையில் வந்துள்ளது. புதிய டோமினார் 400 பைக்கில் கேடிஎம் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற 43mm முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அப்பாச்சி ஆர்ஆர் 310, டியூக் 390 மற்றும் கிளாசிக் 350 உள்ளிட்ட மாடல்களுக்கு இணையான விலையை பெற்றுள்ளது.

Exit mobile version