இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், 2019 மான்ஸ்டர் எனெர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் மாடல்களாக யமஹா R15 V 3.0, யமஹா FZ25, மற்றும் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர் என மொத்தமாக மூன்று மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.
தி கால் ஆஃப் ப்ளூ என்ற பெயரில் பிராசாரத்தை முன்னெடுத்து வரும் யமஹா பைக் நிறுவனம், இதனை தற்போது தி கால் ஆஃப் ப்ளூ 2.0 (The Call of Blue 2.0’) என புதுப்பித்து இந்த பிரசாரத்தை முன்னிட்டு மூன்று மோட்டோ ஜிபி மாடல்களை தற்பொழுது விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
சாதாரண மாடலை விட கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களை பெற உள்ள மான்ஸ்டர் எனெர்ஜி மோட்டோ ஜிபி பதிப்பானது யமஹாவின் YZR-M1 மோட்டோ ஜிபி பைக்கின் நிறத்தை அடிப்படையாக கொண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு கூடுதலாக racing branded டி ஷர்ட்களை இந்நிறுவனம் வழங்குகின்றது.
யமஹா R15 V3.0 Monster Energy Yamaha Moto GP Limited Edition 2019
யமஹா ஆர் 15 வெர்ஷன் 3.0 பைக்கில் 155 சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 19 பிஹெச்பி பவர் மற்றும் 14.7 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் அசிஸ்ட் உடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 17 அங்குல சக்கரங்களை பெற்றுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அப் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது.. பிரேக்கிங் முறையில் முன்பக்கத்தில் 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கின்றது.
சாதாரண மாடலை விட ரூ.2000 வரை யமஹா ஆர் 15 வெர்ஷ்ன் 3.0 மோட்டோ ஜிபி எடிசன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
யமஹா FZ25 Monster Energy Yamaha Moto GP Limited Edition 2019
249 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 20.3 பிஹெச்பி பவர் மற்றும் 20 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 17 அங்குல சக்கரங்களை பெற்றுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அப் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது.. பிரேக்கிங் முறையில் முன்பக்கத்தில் 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கின்றது.
சாதாரண மாடலை விட ரூ.2830 வரை யமஹா எஃப்இசட் 25 மோட்டோ ஜிபி எடிசன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
யமஹா சிக்னஸ் ரே ZR Monster Energy Yamaha Moto GP Limited Edition 2019
சிக்னஸ் ரே இசட்ஆர் மாடலில் புளூ கோர் நுட்பத்துடன் கூடிய எஞ்சினாக விற்பனை செய்யப்படுகின்ற 113 சிசி எஞ்சின் மிக சிறப்பான வகையில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்லதாக விளங்குகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7 bhp ஆற்றல், 8.1 Nm இழுவைத் திறன் கொண்டதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வினை பெற்று விளங்குகின்றது.
சாதாரண மாடலை விட ரூ.1500 வரை யமஹா ரே இசட் ஆர் மோட்டோ ஜிபி எடிசன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Yamaha YZF-R15 Version 3.0 Monster Energy Yamaha Moto GP Limited Edition 2019 | Rs. 143,519/- |
Yamaha FZ 25 Monster Energy Yamaha Moto GP Limited Edition 2019 | Rs. 138,419/- |
Yamaha Cygnus Ray ZR Monster Energy Yamaha Moto GP Limited Edition 2019 | Rs. 60,869/- |
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…