ஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

ஹீரோ கிளாமர் Xtec

125சிசி சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள புத்தம் புதிய கிளாமர் எக்ஸ்டெக் மாடல் ஆனது தற்போது விற்பனையில் இருக்கின்ற சாதாரண கிளாமர் மாடலை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 125சிசி சந்தையில் அதிக வசதிகளை பெற்ற மாடலாக மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.

கிளாமர் மாடலின் டிசைன் வடிவமைப்பு போன்றவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும் கூட புதிய வசதிகள் ஆனது பெரும்பாலும் இளைய தலைமுறையினரை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்திருக்கின்றது.

கிளாமர் Xtec இன்ஜின்

XSens ப்ரோகிராம்டு ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் நுட்பத்துடன் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு கிளாமர் எக்ஸ்டெக் அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் எனப்படும் ஐடியல் ஸ்டார்ட் சிஸ்டம் நுட்பத்தினை கூடுதலாக பெற்றிருக்கின்றது.

கிளாமர் Xtec சிறப்புகள்

முதன்முறையாக 125சிசி சந்தையில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி பெற்ற மாடலாக அமைந்துள்ள எக்ஸ்டெக் பைக்கில் ஆட்டோ செயில் டெக், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், 34 % கூடுதல் வெளிச்சத்தை வழங்கும் வகையில் எல்இடி ஹெட்லைட் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரோல் ஓவர் சென்சார் அதாவது பைக் கீழே தவறுதலாக சாய்ந்தால் இன்ஜின் இயக்கத்தை அணைக்க இயலும், சைட் ஸ்டாணடு உள்ள சமயங்களில் என்ஜின் ஸ்டார்ட் செய்ய இயலாது.

கிளாமர் Xtec பைக்கில் உள்ள முழுபையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் எரிபொருள் இருப்பை நிகழ்நேரத்தில் அறிவதுடன், கியர் பொசிஷன், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியில் கூகுள் மேப் ஆதரவுடன் கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் ஆகியவள்ளை அறிவிப்புகளாக திரையில் பெறலாம்.

இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனில் கிடைக்கின்றது. 240 மிமீ டிஸ்க் உடன் கூடிய பிரேக் மற்றும் இரண்டு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது.

ஹீரோ கிளாமர் Xtec விலை

விற்பனையில் கிடைத்து வருகின்ற கிளாமர் பைக்கினை விட கூடுதலாக ரூ.4000 வரை விலை கூடுதலாக எக்ஸ்டெக் அமைந்துள்ளது. மற்றபடி, 100 மில்லியன் எடிசன், பிளேஸ் எடிசன் ஆகியவை கிளாமரில் விற்பனை செய்யப்படுகின்றது.

Variant Price
Glamour Xtec Drum Rs. 81,900/-
Glamour Xtec Disc Rs. 86,500/-

எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு

125சிசி சந்தையில் கிடைக்கின்ற சூப்பர் ஸ்ப்ளெண்டர் உட்பட ஹோண்டா சைன், ஹோண்டா எஸ்பி 125, பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்துகின்றது.

Exit mobile version