2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் படங்கள் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஃபேரிங் ஸ்டைல் மாடலான எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடல் பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பாக 4 வால்வுகளை கொண்ட எக்ஸ்பல்ஸ் 200T மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 பைக் விற்பனை செய்யப்படுகின்றது.

ஃபேரிங் ஸ்டைலை பெற்றுள்ள இந்த மாடல் 200சிசி சந்தையில் உள்ள பல்சர் RS 200 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. சமீபத்தில் 2023 ஹீரோ பேஸன் பிளஸ் 100  படங்களை வெளிப்படுத்திருந்தோம்.

2023 Hero Xtreme 200S 4V

விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் தோற்ற அமைப்பில் சிறிய அளவில் மாற்றங்கள் பெற்று எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கின்றது. முன்பாக விற்பனைக்கு வந்த 4 வால்வு எக்ஸ்பல்ஸ் பைக்கில் உள்ள என்ஜினை பெற்றுள்ளது.

OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலின் 200cc என்ஜின் பெற்ற அதிகபட்சமாக 8500rpm-ல் 19.1 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 ஸ்டெப் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் 17 அங்குல வீல் கொண்டு  276 mm டிஸ்க் முன்புறத்தில்,  220 mm டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒரு சில டீலர்களுக்கு டெலிவரி துவங்கியுள்ளதால், விரைவில் விற்பனைக்கு எக்ஸ்ட்ரீம் 200S 4v விலை அறிவிக்கப்படலாம். விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.3000 வரை விலை கூடுதலாக இருக்கலாம். எனவே, 2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V விலை ₹ 1.42 லட்சம் (ex-showroom chennai) எதிர்பார்க்கலாம்.

This post was last modified on April 25, 2023 8:55 AM

Share