கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதி பெற்ற ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 83,504 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற STD , DLX வேரியண்டுகளும் கிடைக்கின்றது.
என்ஜினில் எந்த எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் புதிய ஹோண்டா டியோ ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.8hp மற்றும் 9Nm டார்க் வழங்கும். கூடுமலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.
ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களில் இடம்பெற்றுள்ள H-Smart எனப்படுகின்ற கீலெஸ் ரிமோட் வசதி மூலம் கீழே வழங்கப்பட்டுள்ள வசதிகள் கிடைக்கும்.
ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும் ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் அன்லாக் – ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.
ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.
ஸ்மார்ட் ஸ்டார்ட் – கீ இல்லாமல் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.
ஹோண்டா டியோ H-smart நிறங்கள் மேட் டார்க் ப்ளூ மெட்டாலிக், பியரல் இன்ஜினோஸ் கருப்பு, DLX வேரியண்ட் மஞ்சள், கிரே மெட்டாலிக் மற்றும் STD சிவப்பு மற்றும் ப்ளூ மெட்டாலிக் ஆகும்.
DIO STD-OBD2 Rs.76003
DIO DLX-OBD2 Rs.80004
DIO SMART-OBD2 Rs.83504
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
This post was last modified on June 8, 2023 7:51 AM