Automobile Tamilan

2023 Honda Dio Vs Hero Xoom ஸ்கூட்டரில் சிறந்தது எது ?

honda dio vs hero xoom

110cc ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் சந்தையில் கிடைக்கின்ற 2023 ஹோண்டா Dio Vs ஹீரோ Xoom என இரண்டு மாடல்களுக்கு இடையிலான விலை, மைலேஜ் என்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஜூம்  ஸ்கூட்டர் அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் டியோ ஸ்கூட்டர் பெரிய அளவில் தோற்றத்தில் மாற்றமில்லாமல் கூடுதலாக கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் புதிய நிறங்களை பெற்றுள்ளது. 125cc சந்தையில் ஸ்போர்ட்டிவான டிசைன் அம்சங்களை பெற்ற என்டார்க் 125, அவெனிஸ் , ரே இசட் ஆர் மற்றும் ஏப்ரிலியா நிறுவன மாடல்கள் உள்ளன.

2023 Honda Dio Vs Hero Xoom

2002 ஆம் ஆண்டு முதல் சந்தையில் உள்ள ஹோண்டா டியோ ஸ்கூட்டருக்கு என இளைய தலைமுறையினர் பட்டாளமே உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜூம் மாதந்தோறும் 12,000 கூடுதலான எண்ணிக்கையை பதிவு செய்து ஹீரோ நிறுவனத்துக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூம் 110cc ஸ்கூட்டர் என்ஜின் 7250rpm-ல் 8.05 bhp பவர், 5750rpm-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் i3s இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் அமைப்பு உள்ளது.

2023 டியோ மாடல் OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்று 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.65 hp மற்றும் 9 Nm டார்க் வழங்கும்.

Specs 2023 Honda Dio Hero Xoom
என்ஜின் 109.51cc Fi, Air-cooled 110.9cc Fi Air Cooled
பவர் 7.65 bhp at at 8,000 rpm 8.05 bhp at 7500 rpm
டார்க் 9 NM at 4,750 rpm 8.7 NM at 5,750 rpm
கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக் ஆட்டோமேட்டிக்
மைலேஜ் 52 Kmpl 52 Kmpl
அதிகபட்ச வேகம் 90 Kmph 90 Kmph

110cc சந்தையில் மிக வேகமான ஸ்கூட்டர் மாடலாக ஜூம் விளங்குகின்ற நிலையில், டியோ மாடலை விட கூடுதல் பவரை வெளிப்படுத்துகின்றது. சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் செயல்திறனை வழங்குகின்றது.

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

இன்றைக்கு பெரும்பாலான ஸ்கூட்டர்களில் டிஸ்க் பிரேக் வசதி ஆப்ஷனலாக கிடைக்கும் நிலையில் ஹோண்டா வழங்கவில்லை. இருபக்க டயர்களிலும் 12 அங்குல வீல் ஜூம் பெற்றுள்ளது.

Specs Honda Dio Hero Xoom
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் போர்க்
பின் சஸ்பென்ஷன் ஸ்பீரிங் ஹைட்ராலிக் ஸ்பீரிங் ஹைட்ராலிக்
பிரேக்கிங் சிஸ்டம் CBS IBS
முன்பக்க பிரேக் 130 mm டிரம் 130 mm டிரம்/ 190 mm டிஸ்க்
பின்பக்க பிரேக் 130 mm டிரம் 130 mm டிரம்
வீல் F/R 90/90-12 & 90/100-10 90/90 – 12 & 100/80 – 12

பரிமாணங்கள் ஒப்பீடு

ஜூம் ஸ்கூட்டருக்கு 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ள நிலையில் டியோ 5மிமீ கூடுதலாக பெற்று 160 மிமீ பெற்றுள்ளது. வீல்பேஸ் பொறுத்தவரை ஜூம் சிறப்பாக உள்ளது.

Specs Honda Dio Hero Xoom
எடை 103 Kg 105 Kg
இருக்கை உயரம் 770mm 765mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 160mm 155mm
நீளம் 1,808mm 1,881mm
அகலம் 723mm 731mm
உயரம் 1,150mm 1,150mm
வீல் பேஸ் 1,260mm 1,300mm
சேசிஸ் அன்டர் போன் அன்டர் போன்

மற்ற வசதிகள்

இரு மாடல்களுமே தற்பொழுது அலாய் வீல் பெற்றிருந்தாலும், டியோ ஸ்கூட்டர் ரிமோட் கீலெஸ் வசதி பெற்ற H-Smart மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் ஜூம் ஸ்கூட்டரை பொறுத்தவரை அனைத்து வேரியண்டுமே அலாய் வீல் பெற்றுள்ளது. புதுமையான வடிவமைப்பினை பெற்ற டிஸ்க் பிரேக், ஜூம் கார்னரிங் லேம்ப், i3S நுட்பம், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. வெளிபுறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி இல்லை.

டியோ மாடலில் கீலெஸ் ரிமோட் வசதி, டிரம் பிரேக் மட்டுமே உள்ளது. அடுத்தப்படியாக, வெளிப்புறத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி, டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருந்தாலும் கனெக்ட்டிவ் வசதிகள் இல்லை, ஸ்டீல் வீல், அலாய் வீல் என இரண்டாக கிடைக்கும் நிலையிலும், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியில்லை. எல்இடி ஹெட்லைட் உள்ளது.

டியோ ரிமோட் கீலெஸ் வசதி விளக்கம்

ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும்  ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் அன்லாக் –  ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.

ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.

ஸ்மார்ட் ஸ்டார்ட் –  கீ இல்லாமல் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.

Model Ex-Showroom chennai
2023 Honda Dio ₹ 76,003 (Std), 80,004 (DLX) & 83,504 (Smart)
Hero Xoom ₹ 74,899 (LX) , 78,099 (VX) & 82,999 (ZX)

ஹோண்டா டியோ பல்வேறு வசதிகள் குறைவாக பெற்றிருந்தாலும் விலையை பொறுத்தவரை, அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ரூ.1,600 வரை கூடுதலாக உள்ளது.

110cc சந்தையில் உள்ள நேரடியாக இரு மாடல்களும் பகிர்ந்து கொண்டாலும், மற்றபடி ஆக்டிவா, ஜூபிடர், மேஸ்ட்ரோ எட்ஜ் உள்ளிட்டவை சந்தையில் உள்ளது.

Honda Dio 2023 Vs Xoom 110 On-road Price in Tamil Nadu

Model On-Road Price in Tamil Nadu
2023 Honda Dio ₹ 92,670 (Std), 97,780 (DLX) & 1,01,350 (Smart)
Hero Xoom ₹ 91,456 (LX) , 96,432 (VX) & 99,700 (ZX)

(ஆன்-ரோடு விலை பட்டியல் தோராயமானது)

ஹீரோ ஜூம் vs ஹோண்டா டியோ பவர் ஒப்பீடு ?

ஜூம் 110cc ஸ்கூட்டர் என்ஜின் 7250rpm-ல் 8.05 bhp பவர், 5750rpm-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும்.

2023 டியோ 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.65 hp மற்றும் 9 Nm டார்க் வழங்கும்.

டியோ அல்லது ஜூம் எந்த ஸ்கூட்டர் வாங்கலாம் ?

டியோ மாடலுடன் ஒப்பீடுகையில் ஜூம் ஸ்கூட்டரில் கூடுதலான வசதிகள் டிஸ்க் பிரேக், கனெக்ட்டிவிட்டி என பல வசதிகள் உள்ளன.
டியோ மாடலில் வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி, கீலெஸ் ரிமோட் கன்ட்ரோல் உள்ளது.

Exit mobile version