ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற SP125 பைக்கில் OBD-2 மற்றும் E20 எரிபொருள் மேம்பாடு பெற்ற என்ஜின் கூடுதலாக புதிய மார்வெல் ப்ளூ , அகலமான பின்புற டயர் கொடுக்கப்பட்டுள்ளது.
2023 Honda SP125 பைக்
ஹோண்டா SP125 பைக்கில் அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் புதிய மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின், ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் ரியர் ஷாக் அப்சார்பர் உடன் டைமண்ட் ஃபிரேம் உள்ளது. மிக முக்கிய மாற்றமாக, அகலமான 100மிமீ பின்புற டயர் அறிமுகப்படுத்தப்பட்டது.
மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, ஹோண்டா SP125 பைக்கில் LED ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கிளஸ்ட்டரில் நிகழ்நேர எரிபொருள் இருப்பினை காட்டுகிறது.
2023 Honda SP125 விலை
Honda SP 125
| SP125 DRUM | Rs.87933 |
| SP125 DISC | Rs.91933 |
Ex showroom Tamil Nadu