மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அலாய் வீல், எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடுதலான நிறங்களை பெற்ற 2023 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு பைக் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் 650சிசி என்ஜின் பெற்ற சூப்பர் மீட்டியோர் 650 விற்பனை செய்யப்படும் நிலையில் புதிய 650 ட்வின்ஸ் பைக்குகளின் என்ஜின் ஆப்ஷனில் மாற்றம் இல்லாமல் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கில் முந்தைய ஹெட்லைட்டிற்கு பதிலாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் பெற்றதாக வந்துள்ளது. கூடுதலாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், டியூப்லெஸ் டயர்கள் கொண்ட கருப்பு அலாய் வீல்கள், USB சார்ஜர் மற்றும் சுவிட்ச் கியர் மற்ற புதிய RE மாடல்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. கூடுதலாக பிளாக் ரே மற்றும் பார்சிலோனா ப்ளூ நிறங்களை பெற்று மொத்தம் 7 நிறங்களில் கிடைக்கின்றது.
கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கும் இன்டர்செப்டார் போல அலாய் வீல் பெற்று கூடுதலாக எல்இடி ஹெட்லைட், புதிய சுவிட்ச் கியர் உள்ளிட்ட அம்சங்களுடன் ஸ்லிப்ஸ்ட்ரீம் ப்ளூ மற்றும் அபெக்ஸ் கிரே என இரு கூடுதல் நிறங்களை பெற்றுள்ளது.
2023 RE இன்டர்செப்டார் 650 & கான்டினென்டல் GT 650 இந்திய விலை ரூ. 3.03 லட்சம் மற்றும் ரூ. 3.19 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம் சென்னை). முந்தைய மாடலை விட ரூ.14,000 முதல் ரூ.16,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
This post was last modified on March 16, 2023 9:42 AM