Automobile Tamilan

2024 பஜாஜ் பல்சர் என்160 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் அறிமுகம்

Bajaj Pulsar N160

ஏபிஎஸ் ரைடிங் மோடு, அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் வெளியிடப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் 2024 பல்சர் N160 மோட்டார்சைக்கிள் ரூ.1.40 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உடன் கூடிய ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெற்றுள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்ற மாடலை விட மேம்பட்ட சஸ்பென்ஷனை வெளியிப்படுத்துகின்ற வகையில் கோல்டன் நிறத்திலான USD ஃபோர்க் ஆனது வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பின்புறத்தில் தொடர்ந்து மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றது.

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ரைடிங் முறைகளுக்கு ஏற்ற road, rain, மற்றும் off-road மோடுகளின் மூலம் கூடுதல் பாதுகாப்பினை ரைடர்கள் பெறுவதற்கான ஒரு அம்சமாக கருதப்படுகின்றது.

மற்றபடி என்ஜின் பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பல்சர் என்160 பைக்கில் 164.82cc, ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15.7 bhp மற்றும் 14.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற பல்சர் N250 பைக்கிலும் ஏபிஎஸ் ரைடிங் மோடுகள் உள்ள நிலையில் அதே போன்ற வசதியை தற்பொழுது என்160 மாடலும் பெற்றிருப்பதுடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்ற மாடலை விட விலை ரூ.6,000 கூடுதலாக அமைந்துள்ளது.

2024 Bajaj Pulsar N160 STD – ₹ 1.34 லட்சம்

2024 Bajaj Pulsar N160 USD – ₹ 1.40 லட்சம்

(எக்ஸ்ஷோரூம்)

 

Exit mobile version