Automobile Tamilan

2024 இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் அறிமுகமானது

2024 indian roadmaster elite

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ரோட்மாஸ்டர் எலைட் பைக்கின் விலை $41,999 ( ரூ.34.85 லட்சம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சர்வதேச அளவில் வெறும் 350 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ள இந்தியன் ரோட்மாஸ்டர்  எலைட்டின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் இந்த மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது டீலரை அனுகலாம்.

ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் உள்ள தண்டர் ஸ்ட்ரோம் 116 V-ட்வீன் 1890cc ஏர் கூல்டு இயந்திரன் அதிகபட்ச குதிரைத்திறன் 84.78hp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் சில கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் பாடல்களை கேட்பதற்க்கு என பிரத்தியேகமான 12 ஸ்பீக்கர்கள், சேடில்பேக் மற்றும் டாப் பாக்ஸ் மூலம் 136 லிட்டர் கொள்ளளவு பெற்ற ஸ்டோரேஜ் வசதியுடன் இருக்கையை ஹீட் மற்றும் கூலிங் செய்யலாம்.

அடுத்து ரைட் கமென்ட் கனெக்டிவிட்டி ஆதரவினை வழங்கும் வகையிலான 7 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரில் ஆப்பிள் கார் பிளே ஆதரவினை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.

முழுமையான எல்இடி லைட்டிங் பெற்றுள்ள இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் பைக்கில் சிவப்பு மற்றும் கருப்பு நிற கலவையை பெற்று கூடுதலாக மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் மற்றும் லோகோ பைக்கிற்கு சிறப்பாக உள்ளது.

416 கிலோ எடை கொண்டுள்ள இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் 10 ஸ்போக் பெற்ற டைமண்ட் கட் அலாய் வீல், ஸ்டைலிஷான கிராபிக்ஸ் உட்பட பிரத்தியேகமாக சேர்க்கப்பட்ட நிறங்கள் இந்த பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியை வழங்குகின்றது.

Exit mobile version