Automobile Tamilan

புதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 விற்பனைக்கு வெளியானது

2024-Royal-enfield-Hunter-350

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் ரோட்ஸ்டெர் ரக ஸ்டைல் ஹண்டர் 350 பைக் மாடலில் டேப்பர் பச்சை மற்றும் டேப்பர் ஆரஞ்ச் என இரு நிறங்களில் வெளியிட்டுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கின் விலை ரூ.1,49,900 முதல் துவங்கி ரூ.1,74,655 ஆக கிடைக்கின்றது.

2024 Royal Enfield Hunter 350

ஹண்டர் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 349cc ஜே-சீரிஸ் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை எஞ்சின் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

வேரியண்ட் வாரியாக வசதிகள் மாறுபடுகின்ற நிலையில் புதிதாக வந்துள்ள இரண்டு நிறங்களும் டேப்பர் பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது.

ரெட்ரோ மற்றும் மெட்ரோ என பிரிவின் அடிப்படையில் கிடைக்கின்ற மாடலில் இரண்டு நிறங்கள் மட்டுமே ரெட்ரோ பிரிவில் உள்ளது. புதிதாக வந்துள்ள நிறங்கள் மெட்ரோ வகையில் உள்ளது.

பெரிய வித்தியாசம் ஹண்டர் 350 பிரேக்கிங் அமைப்பில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 270மிமீ பின்புற டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைப் பெறுகிறது, அதே சமயம் ரெட்ரோ குறைந்த விலை மாடலில் ஸ்போக் வீல், பின்புற டிரம் பிரேக் மற்றும் ஒற்றை சேனல் ஏபிஎஸ் பெறுகிறது.

ரெட்ரோ 110/80-17 மற்றும் 120/80-17 ட்யூப் டயருடன், அதே சமயம் மெட்ரோ 110/70-17 முன் மற்றும் 140/70-17 பின் டியூப்லெஸ் வகையைச் சேர்ந்தவையாகும்.

2024 Royal Enfield Hunter 350 Price list

(Ex-showroom Tamil Nadu)

Exit mobile version