Automobile Tamilan

புதிய நிறத்தில் 2024 யமஹா FZ-S Fi V4 DLX விற்பனைக்கு அறிமுகமானது

yamaha fz s fi v4

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான FZ-S Fi V4 DLX பைக்கில் ஐஸ் ஃபுளோ வெர்மிலான், மற்றும் சைபர் க்ரீன் என இரண்டு புதிய நிறங்களை வெளியிட்டிருக்கின்றது.

150சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற FZ-S Fi V4 பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் பவர்டிரையின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மோட்டார்சைக்கிளில் 149 cc ஏர்கூல்டு, 4 ஸ்ட்ரோக், SOHC, 2 வால்வு பெற்ற என்ஜின் அதிகபட்சமாக 12.4PS பவர் மற்றும் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஐஸ் ஃபுளோ வெர்மிலான் நிறத்தில் வெள்ளை நிற பெட்ரோல் டேங்க் பெற்று கருப்பு நிற லோகோ மற்றும் பேட்ஜிங் உடன் ஆரஞ்ச் நிறத்திலான வீல் உள்ளது. அடுத்து, சைபர் க்ரீன் நிற மாடலில் பச்சை நிற பெட்ரோல் டேங்க் மற்றும் மஞ்சள் நிற அலாய் வீல் உள்ளது.

இதுதவிர இந்த பைக்கில் சிவப்பு, ப்ளூ, கருப்பு, மற்றும் கிரே நிறங்களும் கூடுதலாக இந்த மாடலில் 3D லோகோ, அலாய் வீல் ப்ளூ அல்லது கோல்டு நிறத்திலும், டிராக்ஷன் கண்ட்ரோல்,  யமஹா Y-Connect ஆப் வசதியுடன் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளது.

முன்புறத்தில் 282 mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 mm டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் 7 ஸ்டெப் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. முன்புற டயர் 100/80-17 மற்றும் ரேடியல் 140/60-R17 பின்புற டயரை கொண்டுள்ளது.

2024 யமஹா FZ-S Fi V4 DLX மாடலின் விலை ₹ 1,30,439 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.

 

Exit mobile version