Automobile Tamilan

2024 யமஹா ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 Fi ஹைபிரிட் விற்பனைக்கு அறிமுகமானது

yamaha ray zr street rally 125fi green

125சிசி ஸ்கூட்டர் சந்தையில் கிடைக்கின்ற யமஹா நிறுவனத்தின் ரே ZR ஸ்டீரிட் ரேலி 125Fi ஹைபிரிட் விற்பனைக்கு ரூ.99,910 விலையில அறிமுகமானது. ஸ்போர்ட்டிவான ஸ்டைல் கொண்ட ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்கு பெற்றிருப்பதுடன் யமஹா Y-கனெக்ட்டிவ் சார்ந்த அம்சங்களில் ஆன்சர் பாக் (Answer Back) வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

முந்தைய மாடலை விட ரூபாய் 2000 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்ற இந்த மாடலில் புதிதாக சைபர் கிரீன் என்ற நிறம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த ஒரு மாற்றங்களும் கிடையாது.

ஆன்சர் பேக் என்று அம்சம் அதிக வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள பகுதியில் இலகுவாக வாகன இருப்பிடத்தை அறிவதற்காக யமஹா Y கனெக்ட் ஸ்மார்ட்போன் செயலி மூலம் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரில்  8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மென் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா டியோ 125 ஆகும்.
Exit mobile version